கற்றிருந்தோம் பள்ளியிலே ,கடினம் கண்டும்
களைப்பறியா எழுச்சியினைக் கற்றுக்கொண்டோம்
சுற்றி நிதம் வீதிகளைச் சுற்றி வந்தோம்-தெருச்
சுந்தரிகள் சிரிப்பினிலே சொக்கிச் சென்றோம்.
பள்ளிதனில் படிப்பதற்குச் சென்றோம் அங்கு மதில்
பாய்வதிலும் பெயரெடுத்த பயல்கள் ஆனோம்.
உள்ளதெல்லாம் நெய்து பல உணர்வுகொண்டோம்-எம்
ஊரினிலே நல்லவராய்க் காட்டிக் கொண்டோம்.
நண்பர்களே எங்களது ராஜா ராணி-
நாட்டிலுள்ள குடிகளதும் அவர்கள் தானே!
கண்ணசைக்க கதைமுடிக்கும் எங்கள் கோஷ்டி
கண்டவர்கள் நொல்லிடுவர் இதற்குச் சாட்சி!
இந்துவிலே வாழுங்காலம் இதயம் முட்டும்
இன்பங்களும் நெஞ்சினிலே கோடி எட்டும்
பந்தெறியின் சுவரடித்து பாதை மீளும்-நாமும்
பார்த்திருந்தோம் பள்ளி வாழ்வு என்று மீளும்????!
2000
Tuesday, August 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
போர் வீரன் உணர மறுக்கும் போர்க்கள உடன் வலி போல் பரீட்சையின் கடும் அழுத்தத்தில் உணரப்படாமலே போய் விட்ட கல்லூரிப் பிரிவு.... அவ்வப்போது வந்து போகும் கல்லூரி நினைவுகள்.... மீண்டும் ஒரு முறை இந்துவிற்கே அழைத்து செல்லும் உங்கள் கவிதை.... அழகு...!
மீண்டும் பள்ளிக்கு நீங்கள் போகலாம்... மாணவனாய் அல்ல... பள்ளி மணி அடித்தவுடன் துள்ளி வரும் மகனை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காய்.... அதற்கு முன்... பிரதம விருந்தினராய்.... இந்துத் தாய் எமக்கு சந்ததிச் சொந்தக்காரி....
Post a Comment